எல்லாம் உமக்காக
ஏசுவே எனது ஆவி ஆன்மா
சரீரம் உமக்காக
1. பாவம் செய்து வாழ்வதிலும்
சாவது எனது லாபமே
கோதுமை மணியாய் நிலத்தில்
வீழ்ந்து சாவதை என்றும்
விரும்புகிறேன் (2)
2. அநித்தியமான பாவத்தின்
சந்தோஷத்தைப் பார்க்கிலும்
தேவ ஜனத்தோடே நானும்
பாடுபட வாஞ்சிக்கிறேன்
3. எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்
எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும்
உந்தன் மகிமைக்காய் அமைய
உதவி செய்யும் ஏசுவே
4. தனக்கானதை நான் தேடாமல்
என்னைப்
பொருட்டென்றெண்ணாமல்
பிறரைக் கனம் பண்ணி வாழ
கிருபை செய்யும் ஏசுவே!