இயேசுவை என் நெஞ்சில்
ஏற்றுக்கொண்டேன்
அவர் அன்புக்கு என்னையே
பறிகொடுத்தேன் அவருக்குள் வாழ்கின்றேன்
அவருக்குள் அசைகின்றேன்
அவருக்குள் சுகித்திருக்கின்றேன்
அவருக்காய் வாழ்கின்றேன்
1.என்றும் மாறாத நம் இயேசு
என் வாழ்வின் சொந்தமானார் (2)
அவரே என் வாஞ்சை
ஆதாரம் என்றும்
விசுவாச வேரூன்றி
அவருக்குள் வளர்கின்றேன்
அவர்மீது மாளிகையாய் நான்
கட்டப்படுகின்றேன்(2) - இயேசு
2.எந்தன் இயேசு தருகின்றார்
பேரின்ப சுக வாழ்வு (2)
அவரே என் வாஞ்சை
பரிசுத்தப் பாதுகாப்பு
அழியாத தேவன்பால்
நித்தமும் நிரம்புகின்றேன்
அவர் தொனி கீழ்ப்படிந்து என்றும்
அவர்பின் நடக்கின்றேன் – இயேசு
3.உயர்தரமான சுவிசேஷம்
உயர்வளிக்கும் என்றும் (2)
அழகிய மனுக்குலத்தின்
தனிப்பெரும் காரணமே
இயேசுவில் நான் காண்பேன்
வாழ்வில் சம்பூரணம்
சமுதாயம் சீர் அமைய என்றும்
அவரே நிவராணம் -
இயேசு