ஆவியின் பட்டயத்தை எடுத்துக் கொள்ளுவோம்
சத்தியத்தை கச்சையாய்
அரையில் கட்டுவோம்
ஆவிகளின் சேனையோடு
போராட்டம் செய்வோம்
அல்லேலூயா பாடியே
சாத்தானை வெல்லுவோம்
தேவன் தம் சகல
பிரஸ்தாபம் யாவிலும்
தம் திருவார்த்தையை
மகிமைப்படுத்தினார்
வானமும் பூமியும் ஒழிந்துபோகுமே
வார்த்தைகளோ ஒழிந்து
போவதில்லையென்றுமே
2.பேதையை ஞானியாக்கும்
பெருமையுடையது
பொன்னிலும் பசும் பொன்னிலும்
விரும்பத்தக்கது
தேனிலும் தெளிதேனிலும்
மதுரமுள்ளது
கண்களைத் தெளிவாக்கும்
கனம் பெற்றதே
3.ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்டது
ஆத்துமாவை உயிர்ப்பிக்க
அருமையானது
ஆதியில் தேவன் தமது
வார்த்தையைக் கொண்டே
ஆச்சரியமாய் உலகை
படைத்தமைத்தாரே
4.வாலிபன் தன் வழிகளை
சுத்தம் செய்திட
வார்த்தையின்றி வேறொரு
வழியுமில்லையே
வானவருக் கெதிராக பாவம்
செய்யாமல் வாழ்ந்திட வசனம்
உன்னில் இருப்பதவசியம்
5.வெற்றி வேந்தர் காட்டிச்சென்ற
பாதை செல்ல நாம்
வெற்றியின் இரகசியத்தை
அறிய வேண்டாமோ எழுதியிருக்கிறதே என்று அவர் பகர்ந்தாரே எதிரிகளின்
சோதனையை
மடங்கடித்தாரே!