வழி நடத்தும் வல்ல தேவன்
வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே
நம் தாழ்வில் நாயகனே!
1.பரசேதப் பிரயாணிகளே
நாம் வாழும் பாரினிலே
பரமானந்தத்தோடே செல்வோம்
பரமன் நாட்டினிற்கே - இயேசு
பரன் தம் வீட்டினிற்கே
2.போகும் வழியை காட்டி நல்ல
போதனை செய்வார்
ஏகும் சுத்தர் மீது கண்கள்
இருத்து நடதுவார் –
இயேசு திருத்தி நடத்துவார்
3.அந்தகார சக்திகள் எம்மை
அணுகிடாமலே
சொந்தமான தம் ஜனத்தை
சூழ்ந்து காப்பாரே - இயேசு
துணையாய் நிற்பாரே
4.வாதை நோய்கள்
வன்துன்பங்கள் வருத்தியபோதும்
பாதையில் நாம் சோர்ந்திடாமல்
பலப்படுத்திடுவார் - இயேசு
திடப்படுத்திடுவார்
5.காடானாலும் மேடானாலும்
கடந்து சென்றிடுவோம் பாடானாலும்
பாடிச் செல்வோம் பரவசமுடனே - இயேசு
பரன் தான் நம்முடனே!