Type Here to Get Search Results !

Tamil Song - 550 - Karunaikkalaam Yesuve

கருணைக்கடலாம் இயேசுவே
கனிவுடனே இப்போஇறங்கிடுமே-எங்கள்

1. வாரும் வல்லமையாய்த்
தாரும் வரங்களை
வர்த்திக்கவேணும் விஸ்வா - சத்தை
புகழ்ந்திடவேஉம் நாமத்தை - எங்கள்

2. தாரகமற்ற தரணியோரை
தாமத மின்றியே மீட்டிட
எழுந்திடுமே இந்நேரமே! - எங்கள்

3. அப்போஸ்தலர் காலம் போல
அற்புதங்கள் அடையாளங்கள்
அதிசய நாமத்தில் ஓங்கிட ! - எங்கள்

4. முடவர் குதிக்க ஊமை துதிக்க
செவிடர் குருடர் கூனரும்
சுகமடைந்து உமைப் பாடிட ! -
எங்கள்

5. கன்னிகையாக கறைகளின்றி
மன்னன் தோன்றும் வேளையில்
பறந்திடவே சபை மேகத்தில் - எங்கள்

6. தயாகரமே! தஞ்சம் நீரே
தியாகமே மேன்மையாம் தாசரை

அபிஷேகித்து உபயோகியும்- எங்கள்