என்னை அழைத்த உண்மையுள்ள
என்றும் மாறாத தேவனே
உம்மைப் போல் சுத்தனாய்
மாறிடவே உம் கிருபை
நிதம் தாருமே
1. பிறர் என்னை என்ன நினைத்தாலும்
எப்போதும் என்னை தாழ்த்தவே
மற்றோரை குற்றமாக
காணாமல் என்றும் என்னை நான்
சோதித்துப் பார்க்கவே
கிருபை தாருமே
நிதம் கிருபை தாருமே
2. தீமைக்குத் தீமையை
செய்யாமல் என்றும்
தீமைக்கு நன்மையைச் செய்யவே
அக்கினி சூழலை தலையில் குவித்து
சாத்தானை காலின்கீழ் மிதிக்கவே
கிருபை தாருமே
நிதம் கிருபை தாருமே
3. உலகக்கவலையால்
ஜெபத்தில் குறைந்து
உம் அன்பை இழக்கவேண்டாமே
சோர்ந்துபோகாமல்
ஜெபிக்க என்றும்
வல்லமை தாரும் ஏசுவே
கிருபை தாருமே
நிதம் கிருபை தாருமே
4. அதிகாலையில் உந்தன் குரலை கேட்க
காலைதோறும் தேவா எழுப்புமே
பலவீனம் யாவும் சிலுவைமீதிலே
வெற்றி சிறந்த ஏசுவே
கிருபை தாருமே
நிதம் கிருபை தாருமே
5. நல்மனசாட்சியைக் காத்துக்கொள்ள
சுத்த இதயத்தில் தொழுதுகொள்ள
சுத்தசிந்தையோடு உம்மைப்பார்க்க
சுத்தசிந்தையோடே பிறரை கணிக்க
கிருபை தாருமே
நிதம் கிருபை தாருமே