என் இஷ்டம் போல வாழ்ந்துமே
கலங்கினேன் இயேசுவே
போதிய வெற்றிகள் கிடைப்பினுமே
அமைதியோ கானல் ஆனதே - ஆனால்
கர்த்தனே என்னைக் கண்டீர்
உள்ளம் அமைதியும் அடைந்தது
இதயம் விழித்ததும் கண்டேன் - தேவா
என் வாழ்வின் நோக்கங்கள்
பரமனே நீர் பயன்படுத்தும்,
பாத்திரமாய்
என்னை மாற்றிடுவீர்
பொன்னாலோ மண்ணாலோ
எந்தன் பாத்திரம் ஆயினும்
பரமனே நீர் பயன்படுத்தும்
பாத்திரமாய்
மட்டும் மாற்றிடுவீர்
2. கர்த்தனே உம்மைக் காணுமுன்
கனவுகள் கண்டேனே
சீரியவாழ்வு அமைத்திடவே
சிறுவன் நான் கனவு கண்டேனே -ஆனால்
கர்த்தனே உம்மைக் கண்டேன்
எந்தன் கனவுகள் கலைந்தன
நனவின் தரிசனம் பெற்றேன் - இதோ
என் வாழ்வு உம் கையில்