கடல் கொந்தளித்துப் பொங்கி,
கப்பல் ஆடிச் செல்கையில்
காற்றடித்து புயல் வீசி
பாய்
கிழிந்து போகையில்
இயேசு, எங்களிடம் வந்து,
கப்ப லோட்டியாயிரும்,
காற்றமைத்து துணைநின்று
கரை சேரச் செய்திடும்
2. கப்பல் ஏறிப் போவோருக்கு
கடும் மோசம் வரினும்
பாறை, இடி மின் முழக்கம்,
காற்று
உமக்கெல்லாம் அடங்கும்,
இருளில் நீர் பரஞ்சோதி
வெயிலில் நீர் நிழலே
யாத்திரையில் திசை காட்டி,
சாவில் எங்கள் ஜீவனே!
3. எங்கள் உள்ளம் உம்மை நோக்கும்
இன்ப துன்ப காலத்தில்
எங்கள் ஆவி உம்மில் தங்கும்
இகபர ஸ்தலத்தில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்;
காற்றமைத்து, துணைநின்று,
கரை சேரச் செய்திடும்!