என்ன
சுகம்! ஆஹா! என்னசுகம்!- என்
இரட்சகரின்
சமூகம் பேரானந்தம்
பரமானந்த
மோட்ச சுகானந்தம் -அதை
பெற்று
அனுபவித்தால் என்னசுகம்!
1.பொன்னகர்
மேடையில் எந்நேரம் பாட லாம்
கின்னரம்
தம்பூர்வீணை இன்னிசை கேட்கலாம்!
2.ஜீவ
நதியில் குளித்துக் களிக்கலாம்
ஜீவ
விருட்சத்தின் கனியும் புசிக்கலாம்!
3.தங்கக்
கிரீடம் தலையில் தரிக்கலாம்
சிங்காசத்தினின்று
ஜெயகீதம் பாடலாம்!