கூடுமே
எல்லாம் கூடுமே
உம்மாலே
எல்லாம் கூடும்
கூடாதது
ஒன்றுமில்லை உம்மால்
கூடாதது
ஒன்றுமில்லை
1.கடல் மீது நடந்தீரையா
கடும் புயல் அடக்கினீரே
சாத்தானை
ஒடுக்கினீரே சர்வ வல்லவரே –
கூடுமே
2.செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம்
பிடித்ததையா
யோர்தான்
உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா – கூடுமே
3.மரித்து உயிர்த்தீரையா மரணத்தை
ஜெயித்தீரையா
மறுபடி
வருவீரையா உருமாற்றம் தருவீரையா – கூடுமே
4.உம் நாமம் சொன்னால்
போதும் பேய்கள் ஓடுதையா
உன்
பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள்
மறையுதையா – கூடுமே
5.மலைகள் செம்மறி போல்
துள்ளியது ஏன் ஐயா
குன்றுகள்
ஆடுகள் போல் குதித்ததும் ஏன்
ஐயா – கூடுமே
6.வனாந்தர பாதையிலே ஜனங்களை
நடத்தினீரே
கற்பாறை கன்மலையை நீருற்றாய் மாற்றினீரே – கூடுமே
7.உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டிகிறீர்
கறையும் காகங்களுக்கு இரை கொடுத்து
மகிழ்கிறீர் – கூடுமே
8.பகலை
ஆள்வதற்க்கு கதிரவனை உருவாக்கினீர்
இரவை ஆள்வதற்க்கு
விண்மீனை உருவாக்கினீர் – கூடுமே