முதல்மரியாதை உமக்கே முழு மகிமையும் உமக்கே – செலுத்த
எங்களுக்கு வாய்ப்பை தந்திரே தேவா தேவா - கொடுக்க
எங்களுக்கு வாழ்க்கை கொடுத்தீரே தேவா தேவா
இருகரம் கூப்பி வரவேற்கிறோம்
இருகரம் தட்டி உம்மை ஆராதிக்கின்றோம்
இரு கரம் அசைத்து உம்மை ஆராதிக்கின்றோம் தேவா தேவா
சேற்றில் புரண்ட வாழ்க்கை வாழ்ந்தேன்
ஊற்றுத்தண்ணீராய் என்னைக் கழுவ வந்தீர் - நீர்
கற்றுத்தந்த அன்பை முற்றும் மறந்து வாழ்ந்த - என்னை
பெற்றெடுக்க சிலுவையில் இரத்தம் சிந்தினீர்
என் பாவம் போக்க சாபம் நீக்க
எனக்காக திறக்கப்பட்ட ஜீவஊற்றே
உலர்ந்த எலும்பாய் எங்கும் சிதறிப்போன - என்னை
உயிர்பிக்க வந்த பரலோக காற்றே
புறஜாதியானேன் புறந்தள்ளப்பட்டேன்
தேவனுக்காய் மீட்டெடுக்க அடிக்கப்பட்டீர்
தேவனின் ராஜரீக ஆசாரியராக்க
எனக்காக அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியே