நண்பனாய் மாறனும்
சிநேகிதனாய் உம்மோடு வாழனும்
உம் வார்த்தையிலே நான் வளரனும்
உம் உறவினிலே என்றும் மகிழனும்
1.உம்மோடு அதிகாலை துவங்கனும்
உம் இன்ப சத்தம் கேட்கணும் -2
சிநேகிதன் போல் ஜாமம் வரை
உம்மோடு மனம் திறந்து பேசணும்
2 .உம் வழிகள் என் வழியாய் மாறனும்
உம் ஒளியின் சுடர் என்னில் வீசணும் -2
உம் கரங்கள் நான் பிடித்து
உயிர்வாழும் காலமெல்லாம் நடக்கணும்
3.உள்ளதை நேசிக்கும் நண்பரே
என் உள்ளத்தில் உள்ளதை சொல்கிறேன் -2
ஜீவனோ மரணமோ நான் ஒருபோதும்
உம்மை விட்டு பிரிந்திடேன்
4. உம் இதய துடிப்பை நான் அறியனும்
உம் விருப்பங்கள் யாவும் புரியனும் -2
உம் இதயம் எண்ணில் மகிழ
உம் நாம மகிமைக்காக வாழனும்
இயேசுவே என் நேசரே
இயேசுவே என் மீட்பரே -2