Type Here to Get Search Results !

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ - Tamil Lyrics

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமோ – என் 
அப்பா உந்தன் அன்பிற்கு இனையாகுமோ 
உலக நேசங்கள் ஈடாகுமோ – என் 
ராஜா உந்தன் அன்பிற்கு இனையாகுமோ 

1.அன்பின் அக்கினி பற்றி எரியுதே 
உள்ளமெல்லாமே உம்மை நாடித்தேடுதே – (2) 
தண்ணீர்கள் தனிபதில்லையே
நேசரே உந்தன் அன்பினை – (2)

2.திராட்சைரசத்திலும் உம் நேசம் பெரியது 
உந்தன் நாமமோ இனிமையானது 
ருசித்துவிட்டேன் உந்தன் அன்பினை 
அறிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை 

3.தாய் தந்தை நீரே  தோழனும் நீரே
சொந்தமும் நீரே எனதெல்லாம் நீரே 
ஆத்ம நேசர் எந்தன் நேசரே 
ஆயுள் எல்லாம் போதும் நீரே