Type Here to Get Search Results !

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்! அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்


ஆச்சரியமான இந்த வழிமுறை யாதெனில், யாரெல்லாம் தங்கள் உரிமைகளை இழப்பதற்கு விட்டுத்தருகிறார்களோ, யாரெல்லாம் வாக்குவாதம் செய்து போராட மறுத்து நிற்கிறார்களோ.. அவர்களே "பூமியைச் சுதந்தரிப்பார்கள்!" எனக் கூறினார். 

தேவன் கிரியை செய்யும் இந்த அற்புத நிகழ்ச்சிக்கு பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம், லோத்தின் வாழ்க்கை ஓர் அருமையான பாடமாய் இருக்கிறது. ஆதியாகமம் 13 -ம் அதிகாரத்தில், ஆபிரகாமின் மந்தை மேய்ப்பருக்கும் லோத்தின் மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று, ஏனெனில் மந்தையை மேய்ப்பதற்கு இருவருக்கும் ஒரே பூமீ  போதுமானதாக இல்லாதபடியால், அவர்களுக்குள் வாக்குவாதம் மூண்டது. இச்சூழ்நிலையில் ஆபிரகாம் தன் மருமகனான லோத்திடம் நடந்துகொண்ட விதம்,ஓர் ஆச்சரியமான சாந்த குணத்தின் வழியாய் இருந்தது ஆபிரகாம், லோத்தை நோக்கி: "நமக்குள் வாக்குவாதம் வேண்டாம்" எனக்கூறி முழு பூமியையும் லோத்திற்கு முன்பாக வைத்து, அவன் விரும்பிய பூமியைச் சுதந்தரிப்பதற்கு முதல் சந்தர்ப்பத்தை லோத்திற்க்கே கொடுத்துவிட்டான்! இப்படியெல்லாம் ஆபிரகாம் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் உண்மைபூர்வமாக ஆபிரகாமைத் தான் தேவன் கானானுக்கு அழைத்திருந்தார். லோத்தைக் காட்டிலும் வயது முதிந்தவரும், அவணுடைய மாமாவாகவும் இருந்தார். எனவே எவ்விதத்திலும் பூமியைச் சுதந்தரிப்பதற்கு தெரிந்து கொள்ளவேண்டிய முதல் சந்தர்ப்பம் ஆபிரகாமுக்குதான் உண்டு ஆனால் இந்த நல்ல ஆபிரகாம் தன் உரிமையை வீட்டுக் கொடுத்து விட்டார் இவ்வித ஜீவியமே சாந்தகுணமாய் இருப்பதின் பொருளாகும்.  

லோத்தோ சுயநலமாய் தனக்கென பூமியின் செழிப்பான பகுதிகளைத் தெரிந்துகொண்டான் இவ்வாறு ஆபிரகாம் பூமியின் செழிப்பான பகுதிகளை லோத்துக்கு விட்டு கொடுத்து விட்டு தனக்கு சாதாரண நிலங்களை வைத்துக் கொண்ட நிகழ்ச்சிகளை தேவன் பரத்திலிருந்து நோக்கி பார்த்து ஆபிரகாமை குறித்தது பெருமகிழ்ச்சி கொண்டார். எவ்வாறு வாக்குவாதம் செய்யாத இயேசுவை : "என் ஆத்துமாவுக்குப்  பிரியமான நேசர்" (மத்தேயு 12:18,19) என பிதா மகிழ்ச்சி அடைந்தாரோ அதற்குக்கொப்பான மகிழ்ச்சியை ஆபிரகாம் நிமித்தமும் அடைந்தார்.மிகுந்த மகிழ்ச்சியோடு தேவன் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி: "உன் கண்களை ஏறெடுத்து நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்க்கேயும், கிழக்கேயும், மேற்க்கேயும் நோக்கி பார். நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றென்ற்றைக்கும் இருக்கும்படி கொடுத்தேன்" என  வாக்கு கொடுத்தார். இவ்வாறு தேவன் தந்துவிட்ட பூமியில் லோத்து சுயநலமாய் பறித்துக்கொண்ட சோதோம் கொமோரா பூமியும் உள்ளடங்கும். மோவாபியர்களும், அம்மோனியர்களும் லோத்தின் சந்ததியார் ஆவார்கள். ஆபிரகாமின் சந்ததியாரோ இன்று நாம் யாவரும் அறிந்திருக்கிற யூதர்கள் ஆவார். சுமார் 4000 வருடங்களுக்கு மேல் கடந்து இந்த  2000 -ம் ஆண்டு வரை தேவன் ஆபிரகாமுக்குத் தந்த பூமியில் (சோதோம், கொமோரா உட்பட) லோத்தின் சந்ததியார் அல்ல, ஆபிரகாமின் சந்ததியாராகிய யூதர்களே அப்பூமியில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள்!! ஆம் சந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்! அவர்களே பூமியை சுதந்தரிப்பார்கள். இன்று இயேசுவின் சீஷர்களாகிய நாமும் ஆபிரகாமைபோலவே இப்பூமியில் எந்தச் சுதந்திரத்தையும் நமக்காக வாரிக்கொள்ளும்படி தேடப்போவதில்லை! இவ்வித வாழ்க்கை வாழ்பவர்களுக்கே எதிர்காலத்தில் "இப்பூமி முழுவதையும் நீங்கள் சுதந்தரிப்பீர்கள்!" என்ற பொன்னான வாக்குத்தத்தம்!!

நாம் எல்லோருடைய மாம்சத்த்திலும் சாந்தகுணம் என்பது இல்லவே இல்லை! எனவேதான் சாந்தகுணத்தை தன்னிடம் வந்து கற்றுக்கொள்ளும்படி  அழைத்தார் (மத்தேயு 11:29). எவ்வாறு பிரசங்கித்து, எவ்வாறு வியாதியஸ்தர்களை சுகமாக்குவது... போன்றவைகளை கற்றுக்கொள்ள தன்னிடம் வருமாறு இயேசு ஒரு போதும் அழைத்ததேயில்லை,மாறாக அவரைப்போல சாந்தகுணமாய் இருக்க கற்றுக்கொள்ளும்படியே நம்மை அவர் அழைக்கிறார். அவரிடம் வந்து சாந்தகுணத்தைக் கற்றுக்கொள்ள வேண்டுமாயின், உரிமைகளை "இறுகப்  பற்றிக்கொள்ளும் கையுடைய" நாம் மாம்சத்தின் சுபாவத்தை அழித்துவிட நாம் ஆயத்தமாய் இருக்கவேண்டும். அப்போது மாத்திரமே தன் உரிமைகளை இழப்பதற்கு ஆயத்தமாக "விரித்த கைகளைக் கொண்டிருந்த" இயேசுவின் சாந்தகுணத்தை நாம் கற்றுக்கொள்ள முடியும்!