Type Here to Get Search Results !

Tamil Song - 630 - Kunappadu Paavi

குணப்படு, பாவி - தேவ
கோபம் வரும் மேவி - இப்போ
கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம் (2)
காலமிருக்கையில் சீலமதாக நீ

1. கர்த்தனை நீ மறந்தாய்  - அவர்
கற்பனையைத் துறந்தாய்
பக்தியின்மை தெரிந்தாய்
பொல்லாப் பாவ வழி திரிந்தாய்
புத்திக்கெட்ட ஆட்டுக்
குட்டியே ஓடி வா
உத்தம மேய்ப்பனார்
கத்தியழைக்கிறார்

2. துக்கமடையாயோ? பாவி
துயரமாகாயோ? மிக்க
புலம்பாயோ? மனம்
மெலிந்துருகாயோ?
இக்கணம் பாவக் கசப்பை
யுணராயோ?
தக்க அருமறைப் பக்கந்
தொடராயோ?

3. தாவீ தரசனைப்போல் - தன்னைத்
தாழ்த்தும் மனாசேயைப்போல்,
பாவி மனுஷியைப்போல் - மனம்
பதைத்த பேதுருபோல்
தேவனுக்கேற்காத
தீமைசெய்தேனென்று
கூவிப் புலம்பு நல் ஆவியின்
சொற்படி

4. உன்னை நீ நம்பாதே - இவ்
வுலகையும் நம்பாதே;
பொன்னை நீ நம்பாதே - எப்
பொருளையும் நம்பாதே;
தன்னைப் பலியிட்டுத்
தரணி மீட்டவர்
நின்னையும் ரட்சிப்பார்,

அன்னவரைப்பற்று!