தூய்மையே வலிமை கேளீர்!
வாய்மையே உயர்வு காணீர்!
இயேசுவில் இரண்டும் பெறுவீர் - (2)
1.சந்திரன் பாதையைக் கண்டாய்!
சமுத்திர ஆழத்தை வென்றாய் (2)
தூய்மையின் பாதைதான் எங்கே?
என பதில் ஏதும் உலகினில் இல்லை! (2)
2.தத்துவம் பேசுவார் உண்டு
தர்க்க சாஸ்திரம் புரட்டுவார்
உண்டு கல்வி கொடுப்பது அறிவு
ஆனால் தேவன் அருள்வது ஞானம்
3.பரிசுத்த ஆவியின் நிறைவு
பரிசுத்தமானதோர் வாழ்வு
வெற்றியின் ஜீவியம் கொள்ள
இயேசு அழைக்கிறார் இணங்கி நீ செல்ல!