Type Here to Get Search Results !

Tamil Song - 569 - Karththarin Panthiyil vaa

கர்த்தரின் பந்தியில் வா - சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தர் அன்பாய் சொந்த
ரத்தத்தைச் சிந்தின காரணத்தை
மனப் பூர்வமாய் எண்ணி – கர்த்தரின்

1.ஜீவ அப்பம் அல்லோ! - கிறிஸ்துவின்
திருச் சரீரம் அல்லோ
பாவ மனங் கல்லோ - உனக்காய்ப்
பகிரப்பட்டதல்லோ
தேவ குமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட

2.தேவ அன்பைப் பாரு - கிறிஸ்துவின்
சீஷர் குறை  தீரு
பாவக் கேட்டைக் கூறு - ராப்போசன
பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில்மனம்  வைத்து
அந்நியன் ஆகாதே

3.அன்பின் விருந்தாமே - கர்த்தருடன்
ஐக்கிய பந்தியாமே
துன்பம் துயர் போமே - இருதயம்
சுத்தத் திடனாமே
இன்பம் மிகும் தேவ அன்பின்
விருந்துக்கு ஏது தாமதமும்

இல்லாதிப் போதே வா!