ஜீவனுள்ள கற்களாய்
இணைத்து ஒன்றோடொன்றாய்
கட்டுகின்றார் ஜீவன் தந்தவர்
1. ஒரு கல்லை படியாக அமைத்திடவே
மறு கல்லை பலிபீடமாக்கிடவே (2)
இழைத்து நொறுக்கி
உடைத்து எடுத்து
தகுதியான இடத்தில் வைத்து
கட்டுகின்றார் ஜீவன் தந்தவர்
2. சுண்ணாம்புக்கல் அது தூளாகுதே
பாறையான கல் அது உறுதியானதே
தம்மிஷ்ட கைவனையால்
தம்மேனி திரு உருவாய்
கட்டுகின்றார் ஜீவன் தந்தவர்
3. அன்பனே அந்தக் கல் நீதான் என்று
அறிந்தே முழுதும்
உன்னை தந்திடு இன்று
சிற்பி தகுந்த இடத்தில் உன்னை
சிறப்பாடீநு ஜொலிக்க வைத்திடவே
கட்டிடுவார் ஜீவன் தந்தவர்