என் தேவனே என் ஏசுவே
வெறுமை வாழ்விலே
என்னை ஆண்டு கொள்ளுமே
என் வெறுமை வாழ்விலே
என்னை ஆண்டு கொள்ளுமே
1.உலக பாரம் அமிழ்த்திடாமல்
உந்தன் பாரம் ஊற்றுமே!
உலக பந்த பாசம் என்னை
உயர்த்த வேண்டாம் தேவனே
இந்த மண்ணின் வாடிநவிலே
உந்தன் மகிமை தாருமே
2. பாவத்தின் இருளுக்கு
பங்கமாக வேண்டாமே!
பாலியத்தின் இச்சைக்கு
விலகி ஓட வேண்டுமே
இந்த மாயை உலகிலே
உந்தன் சாயலாக்குமே
3. வாங்குவதைக் காட்டிலும்
கொடுப்பதே பாக்கியம்!
கேட்பவன் எவனுக்கும்
கொடுங்கள் என்று சொன்னீரே
இந்த வார்த்தை என்னிலே
நிறைவேற வேண்டுமே
4.சிலுவை சுமந்து அனுதினமும்
உந்தன் பின்னே வரவே!
எல்லாவற்றையும் வெறுத்து
உந்தன் சீஷனாகவே
மனத் தாழ்மை வேண்டுமே
உம்மைப் போல மாறவே