ஒப்புவித்தேன் ஐயனே
உம்சித்தம் செய்ய தந்தேனே
முற்றிலுமாய்
அர்ப்பணித்தேன்
ஏற்றுக்கொள்ளும் இயேசுவே (2)
1. சுட்டெரிக்கும் அக்கினியால்
சுத்திகரித்தெம்மை மாற்றிடுமே
ஆவி ஆத்மா சரீரமே
ஆத்தும நேசரே படைக்கிறேன்
2. கண்ணீர் கவலை பெருகுதே
கர்த்தர் தம் வாக்காலே தேற்றிடுமே
உலக சிநேகம் பின்னே வைத்தே
உறுதியாய்
பின் சென்றிட
3. அத்திமரம் துளிர் விடாமல்
ஆஸ்திகள் யாவும் அழிந்திடினும்
கர்த்தர் தம் அன்பை விட்டு நீங்கா
தூய கிருபை தந்தருளும்
4. எந்தனின் சிந்தை முன்னறிவீர்
எந்தனின் பாதை நீரறிவீர்
உந்தன் பாதை நடந்திட
நாதனே என்னையும்
அர்ப்பணித்தேன்
5. காடு மலைகள் போன்ற இடம்
கண்டு என்றும் அஞ்சிடாமல்
அழியும் ஆத்ம தரிசனம்
ஆண்டவா என்னிலே ஈந்தருளும்
6. சோதனை என்னைச் சூடிநந்திடினும்
சோர்ந்திடா உள்ளம் தந்தருளும்
ஜீவகிரீடம் முன்னே வைத்தே
ஜீவிய காலம் நடந்திட