இம்மட்டும்
கிருபை தந்த தேவா
இனிமேலும்
கிருபை தாரும் மூவா
இன்றும்
என்றும் உம்மில் நான் நிற்கவே
இயேசு
நீர் என்னில் உருவாகவே
உம்மைக்
காணவே
1.சோதிக்கப்
பட்ட தூய தேவா
சோதனையில்
பலன் தாரும் தேவா
துன்பங்கள்
தொல்லை சூழ்கையிலே
இன்ப
ஒளியை எனில் வீசியே – இருள்
நீக்குமே
2.பக்தியில்லை
நான் ஆராதிக்க
யுக்தியில்லை
உமைத் துதிக்க
சத்திய
ஆவியின் வல்லமையால்
சக்தியைத்
தாரும் உத்தமராய் – உமைத் துதிக்க
3.நன்றியால்
உள்ளம் பூரிக்குதே
என்றுமே
உம்மில் நான் நிற்கவே
அன்றும்
உதிரம் சிந்தினதால்
இன்றும்
உம் அன்பு பேரு வெள்ளமாய்
புரண்டோடுதே
4.சத்துருவான
சாத்தான் என்னையே
நித்தம்
நெருங்கி எய்க்கையிலே
கர்த்தனே
ஜெயம் பெற்றிடவே
சத்திய
ஆவி வல்லமையை – என்னில் ஊற்றும்
5.ஜெபத்தின்
ஆவி என் அகத்தில் ஊற்றும்
ஜெபத்தினால்
உலகை நான் ஜெயிக்க
உன்னதா
உலகை நீர் ஜெயித்தீர்
உம்
நாமத்தினால் நான் ஜெயிப்பேன் – அல்லேலூயா