கலங்காதே
மகனே
கலங்காதே
மகளே
கன்மலையாம்
கிறிஸ்து
கைவிடவே
மாட்டார் – 3
மலைகள்
பெயர்ந்து போகலாம்
குன்றுகள்
அசைந்து போகலாம்
மனதுருகும்
தேவன்
மாறிடவே
மாட்டார் – 3
உலகம்
வெறுத்து பேசலாம்
காரணமின்றி
நகைக்கலாம்
உன்னை
படைத்தவரோ
உள்ளங்கையில்
ஏந்துவார்
தீமை
உன்னை அணுகாது
துன்பம்
உறைவிடம் நெருங்காது
செல்லும்
இடமெல்லாம்
தூதர்கள்
காத்திடுவார்
வியாதி
வறுமை நெருக்கலாம்
சோதனை
துன்பம் சூழலாம்
உன்னை
மீட்டவரோ
உன்னைக்
காத்துக் கொள்வார்