நல்ல
உள்ளம் தர வேண்டும் நாதா
- உம்மை
நன்றியோடு
பாடி துதிக்க தேவா - 2
துதிகளிலே
வாசம் செய்யும் மூவா - உம்மை
துதித்தாலே இதயம் மகிழும் தேவா
- நல்ல
1.பரிசுத்ததூதர்கள்பணிந்தும்மைதுதிக்க
பரலோக
மகிமையால்நிறைந்துமே ஜொலிக்க -2
கர்த்தரின்வாக்குகள்என்னிலேபலிக்க
சுத்தர்கள்பங்கிலேமகிமையாகநிலைக்க
2.எரிகோ
கோட்டைகள் இடிந்துமே விழுந்திட
இருக்கும்
சிலைகளும் பொடி பொடியாய் நொறுங்கிட
தீமையான
எண்ணங்கள் வேரோடு அகன்றிட
நன்மையான
ஈவுகள் நாள்தோறும் பெருகிட
3.சத்தியத்தின்
பாதையில் நாள்தோறும் நடந்திட
நித்தியத்தின்
தேவனை நீங்காமல் தொழுதிட
பக்தியிலே
உண்மையாய் உள்ளம் வளர்ந்திட
முக்தியிலே
உம்மோடு சேர்ந்தே வாழ்ந்திட!