நான்
நேசிக்கும் தேவன்
இயேசு
என்றும் ஜீவிக்கிறார்
அவர்
நேற்றும் இன்றும் நாளை
என்றும்
மாறாதவர் (2)
நான்
பாடி மகிழ்ந்திடுவேன் என்
இயேசுவைத்
துதித்திடுவேன்
என்
ஜீவிய காலமெல்லாம் அவர்
பாதத்தில்
அமர்ந்திருப்பேன் (2)
1. கடலாம்
துன்பத்தில் தவிக்கும்
வேளையில்
படகாய்
வந்திடுவார்
இருள்தனிலே
பகலவனாய்
இயேசுவே
ஒளி தருவார்
2. பாவ
நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கி
விழும் பசிதனிலே
மன்னாவைத்
தந்திடுவார் (2)
3. தூற்றும்
மாந்தரின் நடுவில் எந்தனைத்
தேற்றிட
வந்திடுவார்
கால்
தளர ஊன்று கோலாய்
காத்திட
வந்திடுவார் (2)
4. நேசர்
என்னோடு துணையாய் ஜீவிக்க
நான்
இனிக் கலங்கிடேனே
எந்தனுக்குக்
காவல் அவர்
நான்
உடல் அவர் உயிரே (2)