உலகைக் கலக்கும் உத்தம சீடர்
நம்மில் யாரு? இங்கே யாரு?
உயிரை கொடுத்தும்
உண்மையைக் காக்கும்
உத்தமசீலர் நம்மில் யாரு?
தலைநகர் முதலாய்
தொலைவிடம் எங்கும்
இனமொழி நிறங்கள் வேலி கடந்தும்
எல்லைகள்எங்கும்இயேசுவைச்சொல்லி
உள்ளங்கள்தோறும் விடுதலை
முழங்கி...
1. மலிவுச் சுகங்கள் தேடாமல்
அடிமைத் தளைகளை
முறித்தவர்கள் கிரயம்
செலுத்த அஞ்சாமல்
துணிவுடன் சிலுவை
சுமப்பவர்கள்-2 நெஞ்சில்
வேதம் ஆழம் பதித்து
ஆவியின் நிறைவை நித்தமும்
காத்து சபைகள் மலர்ச்சி
காணும் ஆசையால்
பொறுப்புடன் ஓடி
உழைப்பவர்கள்-2
2. இயேசுவின் அன்பால்
தூண்டப்பட்டு எல்லை
எங்கிலும் செல்பவர்கள்
உயிர்த்தெழுந்தவர் பெலத்தோடே
மனங்களைக் கொள்ளை
கொள்பவர்கள் - 2
ஜாதி ஜனங்கள் இயேசுவின் அன்பால்
கூட்டிச் சேர்ப்பதே சேவை நோக்கமாய்
முடிவில்லாத விண் தொழுகைக்காகவே
சீடரின் திரளணி சேர்ப்பவர்கள் - 2
3. தேசிய எல்லைக்கு அப்பாலும்
நற்செய்தி சுமந்து செல்பவர்கள்
சிதறுண்ட இந்தியர் விடுதலைக்காய்
தீவிரத்தோடு உழைப்பவர்கள் - 2
தேவ பெலனுடன் தியாகம் புரிந்தே
நாடுகள் தோறும் சபைகள் பெருகவே
சுடர் விடும் ஜோதி நட்சத்திரங்களாய்
தேவனுக்காக ஜொலிப்பவர்கள் - 2