என் மீட்பர் காட்டும் பாதை
இடுக்கமானதே! நான் கவனத்தோடு
அதில் நடக்க வேண்டுமேவெற்றி வாகை
சூடிக் கொள்வேன் அப்போதே!
1. தேவ பயத்தோடு வாழும் யாவரும்
தீரமுடன் சிலுவை சுமக்கவேண்டும் (2)
இன்னல், தொல்லை, சேதம் சேர்ந்து
வந்தாலும், உறுதிகாத்து முனைந்து
செல்ல வேண்டுமே - நம்
உன்னதரின் மகிமை
விளங்கும் அப்போதே
அல்லேலூயா- 3 ஆனந்தமே!
2. முடிவுக்காலம் தலைவிரித்து ஆடிடும்
வஞ்சகப் பிசாசின்சேனைஅடங்கிடும்-2
தருணம் பார்த்து வீழ்த்தும்
அவன் தந்திரம் செயலிழந்து
தோல்வியைத் தழுவிடும் - நம்
பகைவனுக்கு மரண அடி வழங்கிடும்
அல்லேலூயா - 3 ஆனந்தமே!
3. தூய இரத்தம் உடன்படிக்கை
முத்திரை தேவன் அருளும் ஆவி
பெலன் கேடயம் - 2
சாட்சியிடும் திருவார்த்தை காத்திடும்
பேயின் அட்டகாசம்
யாவும் ஒழிந்திடும் - இனி
கர்த்தரே நம்
காவல்கோட்டை நித்தியம்
அல்லேலூயா-3 ஆனந்தமே!