உப்பாக வேண்டும் நாம் உலகிற்கு
ஒளியாக வேண்டும் நாம் பிறருக்கு
நாதன் இயேசு கற்றுத்தந்த நற்கிரியைகள்
சீஷர்களாய்
வெளிப்பட்டு
வாழ்ந்து காட்டுவோம்!
1. இயேசுவின் சீஷர்கள்
நாங்கள்தான் நாங்கள்தான்
அவரது வழியினைத் தொடருவோம்
பேச்சில் அல்ல செயலிலே தான் -2
வீரராய்
திகழ்ந்து செயல்படுவோம் -2
2. சிலுவையின் அர்ப்பணம்
தொடரட்டும் தொடரட்டும்
மரணத்தின் பரியந்தம்
தொடரட்டும்!
பேச்சில் அல்ல செயலிலே தான் - 2
வீரராய்
திகழ்ந்து
செயல்படுவோம்- 2
3. மாமிச இச்சைகள்
ஒழியட்டும் ஒழியட்டும்
சுயமும் நொறுங்கியே சாகட்டும்
பேச்சில் அல்ல செயலிலே தான் -2
வீரரா திகழ்ந்து
செயல்படுவோம்- 2
4. முற்றிலும் ஜெயம் பெறும்
வாலிபர்!வாலிபர்!
பாதாளம் வென்றிடும் வாலிபர்!
பேச்சில் அல்ல செயலிலே தான் -2
வீரராய்
திகழ்ந்து செயல்படுவோம்
-2