நானல்ல இனி இயேசுவே
இன்றும் என்றும் வாழுகின்றார்
(2)என்னில் இன்றும் என்றும்
வாழுகின்றார்
1. நான் என்ற என் அவபக்தியை
தான் என்ற என் அகம்பாவத்தை
(2) சிலுவையில் நிதமும்
சேர்த்தறைந்தே
சேர்ந்தவரோடு பிழைத்திருப்பேன்
(2)
2.
தலைவனின்தாழ்மையில்நான்நடப்பேன்
தரணியில் அவர்தம் புகழ்
சேர்ப்பேன் (2) நெஞ்சத்தில்
தூய்மை அகன்றிடாமல்
நெஞ்சத்தின்
அனலைகாத்திடுவேன்(2)
3. லட்சிய பாதையில் நான் நடப்பேன்
இரட்சிப்பின் தேவனை
உயர்த்திடுவேன்(2)
தேவனின் ராஜ்ஜியம்
திசையெங்கிலும் தீவிரம் பரவிட
நான் உழைப்பேன் (2)