பாவியும், குருடனுமாய்
அழிந்த எந்தனை
ரட்சித்துப் பார்வையளித்த
கிருபை மாதிரள்
2. மரண பயம் நீங்கிற்று
கிருபை பெற்றதால்
தெய்வீக பயம் என் உள்ளில்
கிருபையால் பெற்றேன்
3. உபத்திரவங்கள் யாவையும்
கிருபையால் மேற்கொண்டேன்
இம்மட்டும் தேவ கிருபை
முற்றும் நடத்திடும்
4. பரத்தில் பதினாயிரம்
ஆண்டுகள் சென்றபின்
தேவனுக்குத் துதிகளை
ஓயாமல் பாடுவோம்