நீர் உண்மையுள்ளவர்
என் அன்பின் தேவா!
மாறாத கர்த்தரே, நீர் என் பிதா
இரக்கத்தில் நீர் -
ஐஸ்வரியமுள்ளவர்
சதாகாலமும் நீர் மாறாதவர்
நீர் உண்மையுள்ளவர்,
உம் உண்மை பெரியது
காலை தோறும் புது இரக்கங்கள்
தேவை யாவும் உம் கரங்களால்
பெற்றேன்
உம் உண்மை பெரிது,
என்னிடமாய்
2. உம் உண்மை, இரக்கம்,
அன்பு, கிருபை
எத்தனை மாதிரள் என்பதற்கு
கோடை, பனிகாலம், அறுப்பு
யாவும்
சர்வ சிருஷ்டியும், சாட்சியாகும்
3. தேவ சமாதானம் பாவ மன்னிப்பும்
பரத்தின் நம்பிக்கை எனக்கீந்தீர்
உம் திவ்ய சமூகம் என்னை நடத்தி
ஆசீர்வதியுமென் அன்பின் தேவா!