Type Here to Get Search Results !

Tamil Song - 629 - Untran Suyamathiye

உன்றன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே - அதில் நீ
மகிழ்ந்து மாயாதே

1. மைந்தனே தேவ மறைப்படி
யானும்
வழுத்தும்மதிதனைக் கேளாய்  - தீங்
கொழித் திதமாய்  மனந் தாழாய்
அருள் சூழாய்

2. சொந்தம் உனதுளம் என்று நீ
பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு - அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதி
தேடு

3. துட்டா தம் ஆலோசனைப்படியே
தொடர்ந்திட்ட மதாய்  நடவாதே -
தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது
தீதே

4. சக்கந்தக் காரர் இருக்கும்
இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே - அவர்
ஐக்யம் நலம் என்றெண்ணாதே
அதொண்ணாதே

5. நான் எனும் எண்ண மதால்பிறரை
அவமானிப்பது வெகு பாவம் - அதின்
மேல் நிற்குமே தேவ கோபம்

மனஸ்தாபம்