மங்களம் செழிக்க கிருபையருளும்
மங்கள நாதனே
1. மங்கள நித்திய மங்களன் நீ
மங்கள முக்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய
தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுக் கத்தனாம் ஆபிராம் தேவ
நீ
2. மங்கள மணமகன். . . . . க்கும்
மங்கள மணமகள் . . . . . க்கும்
மானுவேலருக்கும்
மகானுபவர்க்கும்
பக்தியுடன்¬புத்தி முக்தியளித்திடும்
நித்தியனே உன்னைத்
துத்தியம் செய்திடும் சத்திய
வேதர்க்கும்