ரோஜாப்பூ வாச மலர்கள் - நாம்
இப்போ நேச மணாளன் மேல்
தூவிடுவோம்
1. மன்னனாம் மாப்பிள்ளை
பண்புள்ள பெண்ணுடன்
அண்டிலும் தேடியே ஒன்றித்து
வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க
வேண்டுதலோடு தூவிடுவோம்
2. புத்திர பாக்கியம் புகழுடன்
வாழவும்
சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவன் ஈந்ததால் - இப்போ
இந்த மணாளன் மேல்
தூவிடுவோம்
3. கறை திரை அற்ற
மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு
தன்னுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணியே -
இப்போ
இந்த மணாளன் மேல்
தூவிடுவோம்
4. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியே சேர்த்து அள்ளியே வீசி
நல் மணவாளன் மீதிப்போ
எல்லா மலரையும் தூவிடுவோம்