மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு
வாழ்வினில் வாழ்வு
மண வாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
1. துணைபிரியாது தோகை
இம்மாது
சுப மண மகளிவர் இது போது
மண முறை யோது வசனம்
விடாது
வந்தனர் உமதருள்
பெற வேது - நல்ல
2. ஜீவ தயாகரா சிருஷ்டி யதிகாரா
தெய்வீக மா மண அலங்காரா
தேவ குமாரா திரு வெலையூரா
சேர்ந்தவர்க்கருள் தரா
திருப்பீரா - நல்ல
3. குடித்தன வீரம் குணமுள்ள தாரம்
கொடுத்துங் கொண்டாலது
சமுசாரம்
அடக்க ஆசாரம் அன்பு உதாரம்
அம்புவி தனில் மனைக்
கலங்காரம் - நல்ல
4. மன்றல் செய்தேவி
மணாளனுக்காவி
மந்திரம் அவற்குறை மேதாவி
அன்றியிப் பூவி லமிர்த சஞ்சீவி
அவளே இல்லறமாளும்
மாதேவி - நல்ல