Type Here to Get Search Results !

Tamil Song - 590 - Maridaa Em Maa

மாறிடா எம் மா நேசரே -
மாறாதவர் அன்பெந்நாளுமே
கல்வாரி சிலுவை மீதிலே
காணுதே இம்மா அன்பிதே -

! இயேசுவின் மகா அன்பிதே
அதின் ஆழம் அறியலாகுமோ
இதற்கிணையேதும் வேறில்லையே
இணை ஏதும் வேறில்லையே

2. பாவியாக இருக்கையிலே - அன்பால்
பாரில் உன்னைத் தேடி வந்தாரே
நீசன் என்றுன்னைத் தள்ளாமலே
நேசனாக மாற்றிடவே. --- ! இயேசு

3. உள்ளத்தால் அவரைத் தள்ளினும் - தம்
உள்ளம் போல் நேசித்ததினால்
அல்லல் யாவும் அகற்றிடவே
ஆதி தேவன் பலியானாரே --- ! இயேசு

4. ஆவியால் அன்பைப் பகிர்ந்திட - தூய
தேவனின் விண் சாயல் அணிய
ஆவியாலே அன்பைச் சொரிந்தார்
ஆவலாய் அவரைச் சந்திக்க --- ! இயேசு

5. நியாய விதி தினமதிலே - நீயும்
நிலையாகும் தைரியம் பெறவே
பூரணமாய் அன்பு பெருக
புண்ணியரின் அன்பு வல்லதே --- ! இயேசு

6. பயமதை நீக்கிடுமே - யாவும்
பாரினிலே சகித்திடுமே
அது விசுவாசம் நாடிடுமே

அன்பு ஒருக்காலும் ஒழியாதே --- ! இயேசு