இயேசுவைப் போல
நாம் மாறுவோம்
இவ்வுலகத்தின் இருள் நீக்குவோம்
இயேசுவின் பாதையில்
தினமும் நடப்போம்
இயேசுவைப் போல வாழுவோம்
1.நமக்கொரு மாதிரி
பின் வைத்தார் - நாம்
நடந்திட பாதை கொடுத்தார்
அவரது அடிகளைத்
தொடர்ந்தே செல்வோம்
அவரை முழுவதும் பின்பற்றுவோம்
2.காலையில் இருட்டோடெழுவோம்
அவர் கால்களில் வீழ்ந்திடுவோம்
செடியுடன் கொடியென
நிலைத்தே இருப்போம்
சீடர்களாக நாம்
கனி கொடுப்போம்
3.ஒருவரில் ஒருவர் அன்புடன் நாம்
ஒருமித்து செயல்படுவோம்
கிறிஸ்துவின் சபைதன்
நிறைவை அடைய கிறிஸ்துவுக்குள்
நாம் வளர்ந்திடுவோம்
4.சாந்தமும் தாழ்மையைத்
தரிப்போம் - முழு
சத்தியத்தை எடுத்துரைப்போம்
நாட்கள் தோறும்
நானிலம் தோறும்
சிலுவை சுமந்து சாட்சி சொல்வோம்
5.குருடரின் கண்களைத்
திறப்போம் - பாவக்
குஷ்டரோகம் சுத்தமாக்குவோம்
குறைகளை நீக்கும்
பணியினை ஏற்போம்
கிறிஸ்துவின் பாடுகளை
நிறைவேற்றுவோம்