குழந்தை போல மாறுவது
கிறிஸ்துவின் வாழ்க்கை
ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கை!
சிறுகுழந்தைபோல மாறாவிட்டால்
பரலோகம் இல்லை!!
குழந்தையின் வடிவே
இது தாழ்மையின் எல்லை
1.வையப்படும்போது பதில் வையாமல்
பாடுபடும் போதுபயமுறுத்தாமல்
நீதியாய் தம்மை நியாயந் தீர்க்க
என்றும் ஒப்புவித்தார்
இதற்கென்றே நாம் அழைக்கப்பட்டோம்!
2.தன்னைத் தான் ஒரு போதும்
புகழாமல் தனக்கானதை என்றும்
தேடாமல் வாயிலே வஞ்சனைக்
காணப்படாமல் எப்போதும்
மகிழ்ந்திருக்கும்
குழந்தை எல்லாரிலும் மகிழும்!
3.வருங்காலத்தைப்பற்றி நினையாதது
ஒருபோதும் கவலைகொள்ளாதது
வெற்றியோ தோல்வியோ வியாதியோ நஷ்டமோஅப்பாவில்மகிழ்ந்திருக்கும்
மட்டும் கேட்கும்
!
4.யார் எதைச் சொன்னாலும்
மறந்துவிடும் மகிழ்வோடு எதையும்
வாங்கிக்கொள்ளும்
மாய்மாலம் பண்ணாமல்
யார் என்றும் பாராமல்
உள்ளதை உள்ளபடிச் சொல்லி
வெளிப்படையாய் பேசும்
5.ஒருவரையும் அற்பமாய் எண்ணாதது
தன்னால் தான் முடியுமென்று
நினையாதது
எதைச் செய்தாலும் பெருமைக்
கொள்ளாமல் மற்றோரை
மேன்மையாக எண்ணி
கனம்பண்ண முந்திக் கொள்ளும்!