சத்திய தேவனின் பூரண வாழ்வை
அனுபவமாய்
நாம் பெற வேண்டும் (2)
1. தேவனே என்னை போதித்து நடத்தும்
தோல்வி வராமல் தாங்கியே நிறுத்தும்
உத்தம பக்தர்கள் சூழ்ந்து நின்றிட
யேசுவை நோக்கி தொடர உதவும்
2. துன்பங்கள் தொடர்ந்து
வந்திட்ட போதிலும்
துணிந்து நின்ற யோபுவைப் போல
அனைத்து வளமும் அகன்று
போனாலும் ஆபகூக் போல
மகிழ்வேன் என்றும்
3. கொண்டது அனைத்தையும்
குப்பையாய்
கண்ட
லட்சிய வீரர் பவுலினைப் போல
இறுதி நாள் வரையிலும்
உண்மையாய்
இருந்து
அழியா மகுடம் முடிவினைப் பெறவே