உன் தாலந்தெல்லாம் இன்றே செலவிடு
இயேசு கிறிஸ்துவுக்காய்
உன் செல்வமெல்லாம் இன்றே செலவிடு
தேவ அருட்பணிக்காய்
1. பணத்தின் ஆசை
தீமைகளுக்கெல்லாம்
வேராய்
இருக்கிறது
உண்ணவும் நாம் உடுத்தவும்
உண்டானால் அதுபோதும் (2)
2. உலகினில் யாரும் ஒன்று கூட
கொண்டு வந்ததில்லை
இகத்திலிருந்து ஒன்று கூட
கொண்டு போவதில்லை (2)
3. ஆத்தும ஆதாயத்தின் பெலன்
ஜீவனின் கனியாம்
காத்திருந்து அடைந்து கொண்டால்
பாக்கியம் வருமே (2)