அன்பு இயேசுவின் அன்பு எந்தன் பாவத்தை நீக்கினதால்
-
அந்த அன்பை நான் என்றும் விடேன்
1.பாவியாக இருக்கையிலே
பாரிலென்னை தேடி வந்த பரிசுத்த தேவ அன்பு
2.நேசரென்னை அன்பால் இழுத்தார் பாசமாய்
அவரோடிணைத்தார் பரிசுத்த தேவ அன்பு
3.ஆவியின் அச்சார மீந்தார் ஆவியோடவரை
துதிக்க ஆச்சரியமான அன்பு
4.எந்தன் வாஞ்சை இயேசுதாமே எந்தன் ஜீவனும்
இயேசு தாமே அவரென்னை அறிகிறார்
5.எக்காளம் தொனிக்கையிலே ஏகிடுவேன்
இயேசுவுடனே வாழுவேன் அன்பருடன்