பாரதம் இயேசுவைக் காணும்
நம் தேவன் நினைத்தது நடக்கும்
1. பாதாள கோபுரங்கள் நொறுங்கும்
உண்மை சீஷர்கள் சேவையின் மூலம்
ஆவியில் நிறைந்த வாழ்வில்
தினம் வெளிப்படும் தேவனின் மகிமை
தேசத்தையே சுதந்தரிக்கும்
பின் யார் அதைத் தடுத்திட முடியும்
2. தெய்வ
பயத்துடன் வாழும்
திருத் தூதுவர் தொண்டர்கள் மூலம்
திருச்சபை பூத்துக் குலுங்கும்
இந்த தேசத்தில் நன்மைகள் பிறக்கும்
உலகம் கண்டு வியந்திடும்
பரலோகில் பூரிப்பு மிகுந்திடும்
3. ராஜாவின் பிள்ளைகளானோர்
புது பூமியை அமைக்கவே பிறந்தோம்
வித்தாகக் களங்களில் விழுந்தே
தேவ சபைகளை திரளாய்
அமைப்போம்
பிதாவின் சித்தத்தை முடித்தே
விண் மகிமைக்குள்
செல்வோம் மகிழ்ந்தே