கொண்டு வாருங்கள் கொண்டு வாருங்கள்
என் மக்களை என் பக்கமாக கொண்டு வாருங்கள்!
ஆற்றித் தேற்றுங்கள் ஆசீர்வதியுங்கள்
வாழப்பிறந்த மனிதர்களை கொண்டு வாருங்கள்
குற்ற உணர்வைக் கொல்லும்
உணர்வு கொண்டு வாருங்கள்
சுத்தம் செய்யும் எந்தன்
இரத்தம் கொண்டு வாருங்கள்
தாகம் உள்ளோர் அனைவரையும்
கொண்டு வாருங்கள்
பாவம் தீர்க்கும் சிலுவைப்பக்கம்
கொண்டு வாருங்கள்
2. மதமாற்றம் வேண்டாம்
மனமாற்றம் தேவை
விரும்பி வரும் ஜனங்கள் மட்டும்
கொண்டு வாருங்கள்
வருகை வரும் வரை
கிருபை சிலுவையில்
வாழப்பிறந்த மனிதர்களைக்
கொண்டு வாருங்கள்
3. என்னைக் கண்டவன்
பிதாவைக் கண்டவன்
வருந்தி வாழும் ஜனங்கள் யாரும்
கொண்டுவாருங்கள்
வரும் எவரையும்
தள்ளவே மாட்டேன்
வாழப்பிறந்த மனிதர்களைக்
கொண்டு வாருங்கள்
4. பொறுப்பை உணர்ந்தோரே
திருச்சபையாரே
தீவிரமாய் ஓடிச் சென்று
கொண்டு வாருங்கள்
அனுப்பத் தகுதியோ ஆட்கள் இல்லையே
காலம் சிறிது கடமை பெரிது
கொண்டு வாருங்கள்