மகிமை மாட்சிமை நிறைந்தவரே!
மகிழ்வுடன் தொழுதிடுவோம்
பரிசுத்த தேவனாம் இயேசுவை
பணிந்தே தொழுதிடுவோம்
1. உன்னத தேவன் நீரே!
ஞானம் நிறைந்தவரே(2)
முழங்கால் யாவுமே
பாரில் மடங்கிடுதே(2)
உயர்ந்தவரே சிறந்தவரே!
என்றும் தொழுதிடுவோம்
(2) – மகிமை
2. ஒருவரும் சேரா ஒளியில்
வாசம் செய்பவரே!(2)
ஒளியினை தந்ததுமே
இதயத்தில் வாசம் செய்யும்(2)
ஒளிநிறைவே அருள் நிறைவே!
என்றும் தொழுதிடுவோம்
(2)– மகிமை
3. பரிசுத்த தேவன் நீரே!
பாதம் பணிந்திடுவோம்(2)
கழுவியே நிறுத்தினீரே
சத்திய தேவன் நீரே!(2)
கனம் மகிமை செலுத்தியே நாம்
என்றும் தொழுதிடுவோம்(2)
– மகிமை
4. நித்திய
தேவனும் நீரே!
நீதி நிறைந்தவரே!(2)
அடைக்கலமானவரே!
அன்பு நிறைந்தவரே!(2)
நல்லவரே வல்லவரே!
என்றும் தொழுதிடுவோம்
(2)– மகிமை