பணிந்து
பாடி போற்றுவோம்
கனிந்த
ஆவி உண்மையோடு
எம்
தேவனை - ஆ . . ஆ . . ஆ
. .
1.மோசேயை
விடப் பெரியவர்
பிரமாணங்களை
நிறைவேற்றினவர்
வேஷங்கள்
யாவையும் வெறுப்பவர்
பாசமாய்த்
தொழுதிடுவோம் -ஆ . . ஆ . .
2.ஆரோனை
விடப் பெரியவர்
சதா
மாறாத ஆசாரியர்
வாரே
னென்று கூறினவர்
நேரே
நாம் தொழுதிடுவோம்
3.ஆலயத்தை
விடப் பெரியவர்
இங்கு
ஆலயமாக இருந்தவர்
ஆலயம்
நீங்களே என்றவர்
அலங்காரமாய்
தொழுதிடுவோம்
4.யோனாவை
விடப் பெரியவர்
கெட்டுப்
போனோர்களுக்கும் உரியவர்
தாமாக
ஜீவன் தந்தவர்
கோணாமல்
தொழுதிடுவோம்
5.சாலமோனை
விடப் பெரியவர்
தேவஞான
மென்ற பெயர்க்குரியவர்
காலமெல்லாம்
கூட இருப்பவர்
தாராளமாய்த்
தொழுதிடுவோம்
6.அதிபதிகளை
விடப் பெரியவர்
சர்வ
அதிகாரங்களுக்கும் உரியவர்
கர்த்தாதி
கர்த்தாவுமானவர்
கருத்தோடே
தொழுதிடுவோம்
7.எல்லாரிலும்
மேலானவர்
நமக்கெல்லாமுமாக
உள்ளவர்
அல்லேலூயாவுக்
கருகர்
வல்லமையாய்த்
தொழுதிடுவோம்