கர்த்தராலே நீ ஸ்திரப்படுவாய்
தேவ நீதியால் அவரின் வார்த்தையால்
நாம் என்றும் ஸ்திரப்படுவோம் (2)
1.விசுவாசியாக அழைக்கப்பட்டோம்
விரைந்தே இயேசுவில் நிலைத்திடுவோம்
கிருபையின் காலமிது
கிறிஸ்தேசுவில் இரக்கமுண்டு (2)
ஓன்று கூடுவோம் ஒப்புக்கொடுப்போம்
தேவ சித்தம் நிறைவேற்றுவோம் (2)
2.இயேசுவின் அன்பை பரிசுத்தத்தை
பெற்றவர் கொடுப்போம் மற்றவருக்கு
வாசல்கள் திறந்துள்ளதே
சத்ய ஆவியின் துணையுமுண்டே
3. இயேசுவில் நிலைத்தே
கனி கொடுப்போம்
குறைகளை களைந்திட
இடம்கொடுப்போம் !
ஒருமன ஐக்கியம் கொண்டு
ஜீவ நதியாய் பிரவாகிப்போம் (2)