Type Here to Get Search Results !

வில்லியம் டன் லாங்ஸ்டாஃப் (1822 - 1894) - Take Time To Be Holy - Tamil




பரிசுத்தமாயிருக்க நேரமெடுத்துக் கொள்,
அடிக்கடி உன் ஆண்டவருடன் பேசு;
அவரில் எப்போதும் நிலைத்திரு,
அவருடைய வார்த்தையைப் புசித்திடு.
தேவ பிள்ளைகளை நண்பர்களாக்கிக்கொள்;
பெலவீனருக்கு உதவி செய்;
எதிலும் அவருடைய ஆசீர்வாதத்தை 
நாடிட மறந்துவிடாதே.

பரிசுத்தமாயிருக்க நேரமெடுத்துக் கொள்,
இவ்வுலகம் விரைந்து செல்லுதே;
இயேசுவோடு தனித்திருந்து
அந்தரங்கத்தில் செலவிடு அதிகநேரம்;
இயேசுவை நோக்கிப் பார்ப்பதினால்,
ஆவாய் நீயும் அவரைப் போலவே;
நண்பர்களெல்லாம் உன் நடக்கையிலே 
நாதனின் சாயலைக் காண்பாரே.

பரிசுத்தமாயிருக்க நேரமெடுத்துக் கொள்,
அவரே உன் வழிகாட்டியாகட்டுமே,
எதுதான் உனக்கு நேரிட்டாலும் 
அவரை முந்திக்கொண்டு ஓடிடாதே;
சந்தோஷமோ அல்லது துக்கமோ 
இன்னும் ஆண்டவரைப் பின்பற்றிடு,
இயேசுவை நோக்கிப் பார்த்துக்கொண்டே,
இன்னும் அவர் வார்த்தையில் நம்பிக்கை வைத்திடு.

பரிசுத்தமாயிருக்க நேரமெடுத்துக் கொள்,
உன் ஆத்துமத்தில் அமைதியாய் இருந்திடு;
ஒவ்வொரு சிந்தையும் ஒவ்வொரு மனநோக்கமும் 
அவரது கட்டுப்பாட்டின் கீழேயே இருந்திடட்டும்;
அன்பின் ஊற்றுக்களுக்கு நேராக 
இவ்விதம் அவர் ஆவியால் நடத்தப்பட்டு,
பரனது சேவையை செய்திடவே 
விரைவில் நீ தகுதி பெறுவாயே.