ஓ! பாடு!
துதிகனம் மகிமை சேர்த்து செலுத்தி
ஓ! பாடு!
நெற்றித் தரைதொட வீடிநந்து
பணிந்து ஓ! பாடு!
ஆவி ஆன்மா தேகம் தாழ்த்தி
ஓ! பாடு! ஆசைபொங்க
அர்ப்பணத்தோடு ஓ! பாடு!
கிருபை சத்தியம் சேர்ந்திசைந்து ஓ!
பாடு!
அல்லேலூயா துதி முழங்கு
ஆண்டவர் செயலைச் சொல்லி முழங்கு
அல்லேலூயா துதி முழங்கு
ஆண்டவர் செயலைச் சொல்லி முழங்கு
அல்லேலூயா துதி முழங்கு!
2. மூவரு கடவுளை முதற்கண்
வாழ்த்து! ஓ வாழ்த்து!
மூவருக்கும் தனித்துவமுண்டு
ஓ! வாழ்த்து!
சுயம்புவாய்
அவர் அநாதிதேவன்
ஓ! வாழ்த்து!
நிகரில்லாதவர் நித்தியர் அவரை
ஓ! வாழ்த்து!
இயேசுவையன்றி மீட்பரில்லையே
ஓ! வாழ்த்து!
3. ஆற்றல்மிக்கவர் தூய ஆவியை
ஓ! போற்று!
ஆனந்த தைலத்தால் நம்மை
நிரப்பினார் ஓ! போற்று
சிங்காரிக்கும் அழகு சீலனை
ஓ! போற்று!
சுத்தாங்கத்தை உடுத்தி மகிழ்ந்தே
ஓ! போற்று!
முடிவில்லாதவர் மகிமை நாதனை
ஒ! போற்று
இராஜ கம்பீர களையுடன்
வாழ்ந்து ஓ! போற்று