ஒளிதீபம் இளம் நெஞ்சில்
குடியேற்றுங்கள் - அதன்
ஒளிவெள்ளம் உலகெங்கும்
இருள் போக்கவே
திசைமாறும் உள்ளங்கள் வழி காணவே-(2)
திரு ஜனமாக இனி மாந்தர்
உறவாடவே
ஒன்றை வாஞ்சிப்போம்
இணைந்து வாழுவோம்
உலகை வெல்லுவோம்
2. கொடிதான காலங்கள்
தெரிகின்றதே கருத்தோடு
செயலாற்றும் வழி காணுவோம்
கார்மேகம் பார்எங்கும்
படர்கின்றதே
பொறுப்பின்றி இனி வாழ்ந்தால்
அது பாவமே
3. பாலிய பருவத்தின் சிறைவாசங்கள்
வேரோடு பிடுங்குங்கள்,
வெளியேற்றுங்கள்!
தூயாவி துணையோடு
நிறைவேற்றுங்கள்
பின் துணிவோடு விரைந்தெங்கும்
கொடியேற்றுங்கள்!
4. புதுப்பார்வை இதயத்தில்
விழுந்தாகட்டும்
விண் ஆட்சி மண்மீது
வந்தாளட்டும் ஜனம் யாவும்
சிலுவைமுன் பணிந்தாகட்டும்
நம் சமுதாயம்
பாமாலை கீதங்கள் பாமாலை கீதங்கள்
புதிதாகும் நனவாகட்டும்!