என் இயேசுவே நான்
என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும்
வழிநடத்தும்
1. உளையான சேற்றினின்றே
தூக்கியே நிறுத்தினீரே (2)
உந்தனை நான் மறவேன்
உந்தனை போற்றிடுவேன்
2. அலைந்தோடும் கடலதனை
அடக்கியே அமர்த்தினீரே (2)
வார்த்தையின் வல்லமையை
என்றுமே காணச் செடயும்
3. தாயினும் அன்பு வைத்தே
தாங்கியே காப்பவரே (2)
ஜீவிய காலமெல்லாம்
உம்மையே பின் செல்லுவேன்
4. அக்கினி சூளையிலே
நின்ற எம்மெய்
தேவனே
விசுவாசம் திடமனதும்
என்றென்றும் தந்தருளும்
5. ஆகாரின் அழுகுரலை
அன்று நீர் கேட்டீரல்லோ
கருத்துடன் ஜெபித்துமே நான்
உந்தனைத் தேடுகிறேன்