நானும் என் வீட்டாருமோ வென்றால்
கர்த்தரையே சேவிப்போம்
நீயும் சேவிப்பாயா - நீயும்
சேவிப்பாயா
1. கர்த்தரையே சேவிப்பது
ஆகாத தென்று கண்டால் (2)
யாரை நீ சேவிப்பா யென்பதை
இன்றே தீர்மானம் செய்வாய்
2. நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கீழ்படிந்தே அவர் சப்தம் கேட்டு
சாட்சியாய்
ஜீவிப்பாயா
3. தன்னைத்தானே நியாயம் தீர்த்து
ஜீவிக்கும் ஓர் குடும்பம்
கிறிஸ்துவின் நற்கந்தமாய்
என்றுமே சாட்சியாய்
விளங்கிடுமே
4. முறுமுறுப்பும் குறைசொல்லும்
முற்றுமாய்
களைந்தெறிந்தே
ஸ்தோத்திரம் நிறைந்த
குடும்பமாய்
மகிழ்வுடன்
வாழ்ந்திடுவோம்
5. பிள்ளைகளை அன்புடனும்
கண்டிப்போடும் வளர்ப்போம்
சிறியோரை இடறச்செய்யாமல்
சாட்சியாய்
வாழ்ந்திடுவோம்